63 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த சீன அதிபர் -நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டு ரசிப்பு
பதிவு : அக்டோபர் 10, 2019, 07:47 AM
மாற்றம் : அக்டோபர் 10, 2019, 07:49 AM
சீன அதிபர் ஒருவர் தமிழகத்திற்கு வந்து சென்ற நிகழ்வு 63 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது
சீன அதிபர் சூ என் லாய்  1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை வந்தார்.  மீனம்பாக்கம் விமான  நிலையத்தில் அவரை அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா வரவேற்றார். இதன் பின்னர் அவர் இன்றைக்கு நேரு உள்விளையாட்டு அரங்கமாக உள்ள இடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அதே தினம்  ஜெமினி ஸ்டூடியோவை சுற்றி பார்த்தார். அப்போது  ஒரு இந்தி படத்திற்கான நடனக்காட்சி சூ என் லாய் முன்னிலையில் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் பத்மினி நடனம் ஆடினார். பிறகு சீன அதிபரை ஸ்டூடியோவில் உள்ள பல பகுதிகளுக்கு அழைத்து சென்று காண்பித்து ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசன் படப்பிடிப்பு நடைபெறும் விதம் குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையிலுள்ள ஐசிஎஃப் வளாகத்தை பார்வையிட்டுள்ளார். ஐசிஎஃப் வளாகத்தின் வருகை பதிவேட்டில் இது ஒரு நவீன ரயில்வே தயாரிப்பு நிறுவனம் எனவும் சீனர்கள் இங்கு வந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன பிரதமர் சூ என்லாய் எழுதியுள்ளார். இதன்பிறகு மாமல்லபுரம் சென்ற சூ என் லாய்  வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டார். பின்னர் மாமல்லபுரம் அருகே 9 கிமீ தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் எனும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். பின்னர் டிசம்பர் 7ஆம் தேதி சீன அதிபர் சூ என் லாய் சென்னையிலிருந்து சீனா புறப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11634 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

275 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

115 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

71 views

பிற செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

13 views

அமெரிக்க அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் : விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

123 views

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று தொடங்கி உள்ளது.

295 views

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சி : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

14 views

பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் அது 6 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது.

45 views

சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடந்தால் மட்டும் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேசாத வரை சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திட போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.