சென்னை வரும் சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு ஏற்பாடு
பதிவு : அக்டோபர் 09, 2019, 02:54 PM
வரும் 11ஆம் தேதி சென்னை வரும் சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 11ஆம் தேதி பிற்பகல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் அவருக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளோடு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்து 800 கல்லூரி மாணவ-மாணவிகள், சுய உதவிக் குழுவினர் மற்றும் அதிமுகவினர் மூவர்ணக் கொடி ஏந்தி வரவேற்பு கொடுக்கின்றனர். வாழை மற்றும் கரும்புகளால் வளைவுகள் அமைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது. செண்டை மேளம், நாதஸ்வர நிகழ்ச்சி, தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்பு கொடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கிண்டி, சைதாப்பேட்டை, கந்தன்சாவடி, திருவிடந்தை, மாமல்லபுரம் என 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் இதற்காக 49 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

10702 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

98 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

75 views

பிற செய்திகள்

என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது.

1 views

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை, இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

6 views

தசரா விழாவை முன்னிட்டு சப்பரங்கள் அணிவகுப்பு

தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

8 views

ஃபேஷன் ப்ரூட் பழரசம் தயாரிப்பு பணி தீவிரம் : விருப்பத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில் ஒரு டன் பழங்களை கொண்டு, பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

7 views

இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.

உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கண்காட்சியை துவக்கியுள்ளது.

5 views

ஒரு முறை மட்டுமே மலர கூடிய "ஸ்வேன் நெக்" பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ

கொடைக்கானலில் ஒரு முறை மட்டும் மலர கூடிய அரிய வகை செடியான ஸ்வேன் நெக், 35 ஆண்டுகள் பிறகு மலர்ந்துள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.