"பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வருகிறது" - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்து வருவதாக, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வருகிறது - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாகிஸ்தானின் தாக்குதல்களை எப்படி கையாள வேண்டும் என்பது இந்திய ராணுவத்துக்கு தெரியும் என கூறினார். நமது வீரர்களுக்கு தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், பாகிஸ்தானுக்கு பதிலடி  கொடுக்க தெரியும் என்றும் ராணுவ தளபதி கூறினார். மிகுந்த விழிப்புணர்வுடன் இந்திய ராணுவம் உள்ளதாகவும், அதனால் பாகிஸ்தானின் தீவிரவாத ஊடுருவல் திட்டங்களை உடனுக்குடன் தடுத்து அழித்து வருவதாகவும் பிபின் ராவத் தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கும், அவர்களை பாகிஸ்தானில் இருந்து இயக்குபவர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு ராணுவ நடவடிக்கையால் துண்டிக்கப்பட்டு உள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்தார். மேலும் அங்கு பொதுமக்களுக்கான தகவல்தொடர்பில் எவ்வித தடங்கலும் இல்லை என்றும் அவர் கூறினார். ஜம்மு, காஷ்மீரில் இடையூறை உருவாக்க, இஸ்லாம் பற்றி தவறான விளக்கத்தை அளித்து வந்தவர்கள் குறித்து அங்குள்ள பெரும்பாலான மக்கள் அதிருப்தி  அடைந்துள்ளதாக பிபின் ராவத் குறிப்பிட்டார். காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் பிபின் ராவத் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்