தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்
x
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் படி மெட்ரிகுலேஷன் இயக்குநர் பணியிடம் என்பது தனியார் பள்ளிகள் இயக்குநர் என மாற்றப்பட்டுள்ளது. அவரது பொறுப்பில் சுயநிதி தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ போன்ற பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டத்தில் மனரீதியான உடல்ரீதியான பாலியல் தொல்லையிலிருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சரியாக படிக்காத மாணவர்களை தேர்வு எழுதுவதில் இருந்து தடுக்க கூடாது என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்