நீரவ் மோடி வெளி நாட்டிற்கு தப்பிச் செல்ல உதவி : நீரவ் மோடி சகோதரர் நேஹலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியின் சகோதரர், நேஹலுக்கு எதிராக இண்டர்போல் "ரெட் கார்னர் நோட்டீஸ்" பிறப்பித்துள்ளது.
நீரவ் மோடி வெளி நாட்டிற்கு தப்பிச் செல்ல உதவி : நீரவ் மோடி சகோதரர் நேஹலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்
x
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியின் சகோதரர், நேஹலுக்கு எதிராக இண்டர்போல் "ரெட் கார்னர் நோட்டீஸ்" பிறப்பித்துள்ளது. பெல்ஜியம் குடியுரிமை பெற்றவரான நேஹல், வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் செல்ல நீரவ் மோடிக்கு உதவியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை சேகரித்த அமலாக்கத்துறை நேஹலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இன்டர்போல் அமைப்பிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நீரவ் மோடி தொடர்பான வழக்கின் ஆதாரங்களை, நேஹல் அழித்து விடும் வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை இன்டர்போல் அமைப்பிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்