பெங்களூருவில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபருக்கு துன்புறுத்தல் - காவல் உதவி ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்

பெங்களூருவில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை ஹாக்கி மட்டையால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூருவில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபருக்கு துன்புறுத்தல் - காவல் உதவி ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்
x
பெங்களூருவில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை,  ஹாக்கி மட்டையால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பெங்களூருவை சேர்ந்த ரவுடி யஸ்வந்த், அப்பகுதியில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்துள்ளார். இதையடுத்து, கடந்த மே மாதம் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில்,  யஷ்வந்த்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார், காவல் நிலையத்தில் வைத்து அவரை ஹாக்கி மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில், உதவி ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, பெங்களூரு எஸ்.பி உத்திரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்