நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
சந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் அதிகாலை,  ஒன்று 38 மணியளவில் நிலவில் தரையிறங்க தொடங்கியது. நிலவின் தரைப்பகுதியில் இருந்து 2 புள்ளி 1 கிலோ மீட்டர் உயரத்தில் சென்ற போது விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் சோகத்தில் ஆழ்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் மூலம் தொடர்பு கொள்ள  தொடர்ந்து விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், நிலவின் நிலப்பரப்பில் விக்ரம் லேண்டர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நிலவை சுற்றி வரும்  ஆர்பிட்டர் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனாலும், விக்ரம் லேண்டரிலிருந்து எந்த தகவலும் இல்லை என்றும், அதனை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சிவன் கூறினார். விக்ரம் லேண்டர் குறித்த புதிய  தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிவன் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்