முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது
பதிவு : செப்டம்பர் 04, 2019, 08:26 AM
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுடெல்லியில் உள்ள சிவக்குமார் வீட்டில் இருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.  விசாரணையின் முடிவில் டி.கே. சிவக்குமாரை கைது செய்த அமலாக்கத்துறை , புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளது.
 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.