தலைக்காவிரியில் இருந்து மோட்டார் சைக்கிள் பயணம் : 3, 500 கி.மீ. விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் ஜக்கி வாசுதேவ்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 07:16 AM
காவேரி கூக்குரல் இயக்கத்தில் அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான 3 ஆயிரத்து 500 கி.மீ மோட்டர் சைக்கிள் பயணத்தை கொட்டும் மழையில் தலைக்காவேரியில் இருந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்.
'காவேரி கூக்குரல்' இயக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடங்கப்பட்டுள்ளது. இது ஈஷா அவுட்ரீச் மேற்கொள்ளும் 2-வது நதி மீட்பு களப் பணி. இந்த இயக்கத்தின் சார்பில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப் பகுதி விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் காவிரி உதயமாகும் தலைக்காவிரியில் இருந்து கொட்டும் மழையில் தனது இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை சத்குரு  ஜக்கி வாசுதேவ்  தொடங்கினார்.  மைசூரு, மாண்டியா, பெங்களூரு, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை,  புதுச்சேரி வழியாக செப்.15-ம் தேதி சென்னை அவர் வந்தடைகிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சவால் மிகுந்த இந்த பயணத்தில் பயணிக்க பலரும் உறுதியுடன் இருப்பது பாராட்டுக்குரியது என்றும், இந்த மழையை மண்ணுக்குள் அனுப்ப மரங்கள் அவசியம் என்றும்  கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

பிற செய்திகள்

"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

1 views

இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"

86 views

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

23 views

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

353 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.