5 - ந்தேதி வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் - சிபிஐ காவலுக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 12:02 AM
ஐந்தாம் தேதி வரை ப.சிதம்பரத்திற்கு, சிபிஐ காவல் தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், சிபிஐ காவல், கைதுக்கு எதிராக ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு அழுத்தம் தரப்பட்டதாக கூறினார். மேலும்,  14 நாள்கள் கழித்து ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ப.சிதம்பரத்தின் மனு செப்.5 ஆம் தேதி விசாரிக்கப்பட்டால் பலனற்றதாகிவிடும் என்றும் தெரிவித்தார். அப்போது, சிபிஐ நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றால், ஜாமின் கோர மாட்டோம் என, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தனர். விசாரணையின் முடிவில், ப.சிதம்பரத்திற்கு, சிபிஐ காவல் தொடரும் என்றும் வருகிற 5-ம்  தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிற செய்திகள்

பசுமை ரயில்வே என்ற இலக்கை நோக்கி செல்லும் ரயில்வே துறை : 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

8 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் : அமைச்சர், அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் பேச்சு

ஆந்திர மாநிலம் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : அதிகாரிகளுடன் கர்நாடக முதலமைச்சர் ஆலோசனை

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையத் தொடங்கி உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

7 views

"டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும்" : துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

10 views

"வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து தொகுப்பு" : ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

7 views

கேரள தங்கம் கடத்தல் வழக்கு - வலுக்கும் போராட்டங்கள்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து, முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.