மருத்துவரை தாக்கினால் இனி 10 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசு திட்டம்
பதிவு : செப்டம்பர் 03, 2019, 03:17 PM
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை தாக்குதலில் இருந்து பாதுகாக்க, மக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்கிறது.
நாடு முழுவதும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில், பணியில் இருக்கும் மருத்துவரை தாக்கினால் இனி 10 ஆண்டு சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் அளவில் மத்திய சுகாதார அமைச்சகம் வரைவு மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாமில் 73 வயதான ஓய்வு பெற்ற மருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த மசோதாவை தயாரிக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தேயிலை தோட்ட ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மருத்துவமனையில் இல்லாதது ஏன் என்று கேட்டு அந்த ஓய்வு பெற்ற மருத்துவரை அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் சுகாதாரப் பணி ஊழீயர்கள் மற்றும் மருத்துவமனை மீது வன்முறையை தடுத்தல் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு மசோதா 2019 - ஐ மேம்படுத்த தேவையான யோசனைகளை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அந்த துறை அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3584 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

366 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

331 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

1 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.