அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சீன அதிபருடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 02, 2019, 11:56 AM
வரும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சீன அதிபருடன், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.
கடந்தாண்டு ஏப்ரலில் சீனாவின்  Wuhan நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளித்த, அந்நாட்டு அதிபர் விருந்தளித்தார். இந்த 2 நாள் சந்திப்பின் போது, இருதரப்பு உறவு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாட்டின் வளர்ச்சி, நடப்பு டற்றும் எதிர்கால சர்வதேச சூழல் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்த பயணத்தின் போது, Hubei மாகாண அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில், சீன அதிபருக்கு வரும் அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி விருந்தளிக்கிறார். வரும் அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் கண்காணிப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யுனெஸ்கோ புகழ்பெற்ற மாமல்லபுரம் சிற்பங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைத்து சென்று காட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுடன், வெளியுறவுத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் விருப்பம் : ஜம்மு ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்

ஆளுநராக பதவியேற்க இங்கு வரும் முன்பு ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும் என்று தம்மிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

133 views

மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

87 views

சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி

சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

71 views

சீனா : வண்ண விளக்குகளால் ஜொலித்த கோபுரம்

சீனாவின் குவாங்டாங் நகரில் வண்ண விளக்குகளால் ஜொலித்த கன்டான் கோபுரம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

44 views

பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடிவரும் பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

21 views

பிற செய்திகள்

திமுக வேட்பாளர் 24-ம் தேதி அறிவிப்பு...?

நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்பமனுவை திமுக பெற்று வருகிறது.

35 views

அதிமுக வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு...?

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக சார்பாக போட்டியிடுவோரிடம் அந்த கட்சித் தலைமை சார்பாக விருப்பமனு பெறப்பட்டு வருகிறது.

55 views

அமெரிக்காவில் 'ஹவுடி மோடி' வரவேற்பு நிகழ்ச்சி : களைகட்டிய வரவேற்பு கலை நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ​​ஹுஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவ்டி மோடி' என்ற விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவானாது, கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது

64 views

பிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

37 views

ஒரே நாளில் இடி மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்

தமிழகத்தில் ஒரே நாளில் இடி மின்னல் தாக்கியதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில், பெண் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

30 views

பூத்துக்குலுங்கும் இலந்தைப்பூக்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், அரிய வகை இலந்தை மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.