நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்
பதிவு : செப்டம்பர் 02, 2019, 10:52 AM
விநாயகர் சதுர்த்தி இன்று செப்டம்பர் 2, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி 2019 : பிள்ளையார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்து வருகின்றனர். அதிகாலை முதலே கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.  சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கற்பக விநாயகரை தரிசனம் செய்தார். 


உச்சி பிள்ளையாருக்கு சந்தன காப்பு அலங்காரம் - கருவறை வாயிலுக்கு பழத் தோரணம் 

சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள், வரிசையில் காத்திருந்து உச்சி பிள்ளையாரை தரிசனம் செய்தனர். 


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் நடைபெற்று வரும் கண்காட்சி பொதுமக்களை ஈர்த்து வருகிறது. சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணரான சீனிவாசன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை கண்காட்சியை நடத்தி வருகிறார். 13 வது ஆண்டாக தற்போது தொடங்கியுள்ள கண்காட்சியில், 12 ஆயிரம்  விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சிட்லபாக்கத்தில் தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில், ஏழு அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரத விநாயகர், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 200க்கு மேற்பட்ட சிலைகள் இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோவில்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 

குழந்தைகளை கவரும் விநாயகர் கண்காட்சி

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக, சேலத்தில் குழந்தைகளைக் கவரும் விநாயகர் கண்காட்சி தொடங்கியுள்ளது. 35 வது ஆண்டாக தொடங்கியுள்ள கண்காட்சியில், இந்த ஆண்டு பல லட்ச ரூபாய் மதிப்பில் மின்னணு ஒளியமைப்பில் ஜொலிக்கும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் அவதாரத்தை விளக்கும் காட்சிகளை தத்துரூபமாக வடிவமைத்துள்ளதுடன், இந்தியா மின்னணு முன்னேற்றத்தில் வளர்வதை குறிக்கும் விதமாக முழுவதும் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


மணக்குள விநாயகருக்கு தங்க கவச அலங்காரம்

சதுர்த்தி விழாவையொட்டி புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் மற்றும் உற்சவருக்கு தங்க கவசம் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. சிரமமின்றி பக்தர்கள் விநாயகரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தங்க கவச அலங்காரத்தில் மும்பை சித்தி விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மும்பை சித்தி விநாயகர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் பிள்ளையார் காட்சி தருகிறார். கண்ணை கவரும் விதமாக ஜொலிக்கும் பிள்ளையார் சிலை முன்பு, பூ, பழம், அருகம்புல் வைத்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. தலைப்பாகை கிரீடத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பிள்ளையாரை பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா - தயாராகும் கும்கி யானைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் கும்கி யானைகளுக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

64 views

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

31 views

காஞ்சிபுரம் : விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

22 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

14 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

15 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

27 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.