அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியீடு : 19.06 லட்சம் பேர் பட்டியலில் நீக்கம்

தேசிய குடிமக்கள் பட்டியலில், அசாமில் வசித்து வந்த, 19 லட்சத்துக்கும் அதிகாமானோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.
அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியீடு : 19.06 லட்சம் பேர் பட்டியலில் நீக்கம்
x
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில், 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் நீக்கப்பட்டுள்ளனர். குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும், பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக, வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அசாம் மாநிலம் முழுவதும் சுமார் 400 தீர்ப்பாயங்கள் அமைககப்பட்டுள்ளன. பெயர்கள் நீக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு சட்ட உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  19 லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்