இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் முதல் முறையாக சரிவு
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 11:22 PM
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த 6 ஆண்டுகளில் , முதன்முறையாக பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த 6 ஆண்டுகளில் , முதன்முறையாக பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2013 ம் ஆண்டின் ஏப்ரல் -ஜூன் மாதங்களுக்கு பிறகு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, முதல் காலாண்டில், 5 சதவீதமாக சரிந்துள்ளது. அதாவது, 5 புள்ளி 8 சதவீதத்தில் இருந்து, இந்த சரிவு நிகழ்ந்தது. அதேநேரம், கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதமாக இருந்தது என்பதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதனிடையே, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே. வி. சுப்பிரமணியன், பொருளாதாரம் மீண்டும் பழைய நிலையை எட்ட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார். 

பிற செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 views

பி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

0 views

கேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

கேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.

1004 views

மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா

பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.