ப.சிதம்பரம் வழக்கு : மேத்தா உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 02:56 PM
அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த வழக்கில், ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ப.சிதம்பரம் தரப்பு வாதம் ஏற்கனவே முடிந்த நிலையில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பு வாதம் நடந்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் வழக்குகளும் பாதிக்கப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இருந்து சிதம்பரம் தப்பிக்க நினைக்கிறாரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்பு முடிவு செய்யும் என்றார். சாட்சிகள், ஆதாரங்கள், ஆவணங்களை அழிப்பது, பண பரிவர்த்தனையை தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களே கைதுக்கு காரணமாக இருக்க முடியும் என துஷார் மேத்தா தெரிவித்தார். 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிதம்பரம் உள்ளிட்டோரிடமிருந்து உண்மையை வெளிக்கொணர்வது அமலாக்கத்துறையின் கடமை என்றும் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தார். பொருளாதார குற்றங்கள் ஒருவரை கத்தியால் குத்துவதுபோல இல்லாவிட்டாலும், அவை தேசத்திற்கு எதிராக பயங்கரமான குற்றமாகும் என வாதத்தின் போது துஷார் மேத்தா எடுத்துரைத்தார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், உணவு இடைவேளைக்கு பிறகு  பிற்பகலுக்கு 2 மணிக்கு விசாரணை தொடரும் என தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3322 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

293 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

289 views

பிற செய்திகள்

பிரதமருக்கு வரவேற்பு - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம்

தமிழ் மொழியை தொன்மையான மொழி என கூறிய பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்பதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

1 views

தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன், தமிமுன் அன்சாரி பங்கேற்பு

இலங்கை பிரச்சினை தொடர்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2 views

"மதுரை - போடி அகல ரயில்பாதை ஓராண்டில் நிறைவடையும்" - தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

0 views

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.

1 views

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் - போராட்டத்தின் போது உயிரிழந்த காங். நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரத போராட்டத்தின் போது அக்கட்சி நிர்வாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

48 views

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.