கேரளாவில் இளைஞர் ஆணவக் கொலை வழக்கு : 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 02:28 PM
சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் தலித் கிறிஸ்துவ இளைஞரை கடத்தி கொலை செய்த வழக்கில், கேரளாவை சேர்ந்த 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் தலித் கிறிஸ்துவ இளைஞரை கடத்தி கொலை செய்த வழக்கில், கேரளாவை சேர்ந்த 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோட்டயம் மன்னானம் பகுதியை சேர்ந்த 23 வயதான கெவின், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான நீனுவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கெவினை கடத்தி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் போலீசார் காலம் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கெவினை ஆணவக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், நீனுவின் சகோதரர் ஷானு சாக்கோ உள்ளிட்ட 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீனுவின் தந்தை சாக்கோ உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை​ விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

408 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

365 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

146 views

காவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்

கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

81 views

பிற செய்திகள்

கேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

கேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.

989 views

2 ஜி, ஏர்செல் வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றம்

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

103 views

ஆந்திரா : மகாநந்தி கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

62 views

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

717 views

நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

52 views

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என பெயரிடப்பட்டுள்ளது.

120 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.