நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலை - பிரியங்கா காந்தி
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 12:03 AM
நாட்டின் பொருளாதார நிலை பத்திரிகை விளம்பரங்களில் வெட்ட வெளிச்சமாகி வருவதாக பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை பத்திரிகை விளம்பரங்களில் வெட்ட வெளிச்சமாகி வருவதாக பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாடர்ன் ரயில் பெட்டி தொழிற்சாலையை, தனியார் மயமாக்குவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,  அங்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் போராட்டம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, தேயிலை தோட்டம் மற்றும் நூற்பாலை கூட்டமைப்பினர், தாங்கள் நசிவடைந்து வருவதாகவும், தங்களை காப்பாற்ற வேண்டும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்ததை பார்த்ததாக தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி அடைந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக இந்த விளம்பரம் உள்ளதாகவும் பிரியங்கா தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.