ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி
x
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.  ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், விடுத்த அழைப்பை, ஏற்று, 9 எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல்காந்தி சனிக்கிழமையன்று, காஷ்மீர் செல்ல முடிவு செய்துள்ளார். ராகுல்காந்தியுடன், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், சீதாராம் யெச்சூரி,  திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் சரத் யாதவ், தினேஷ் திரிவேதி, டி.ராஜா, மஜித் மேமன், மனோஜ் ஜா, குபேந்திர ரெட்டி ஆகியோரும், ஸ்ரீநகர் சென்று, அங்கு நிலவி வரும் சூழலை  ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் வரவேண்டாம் என, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர்கள் வருகையால், சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும், பல பகுதிகளில் இன்னும் சில கட்டுப்பாடுகள் உள்ளதால், கட்சித் தலைவர்கள் தங்களது பயணத்தை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்