அன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்
பதிவு : ஆகஸ்ட் 22, 2019, 12:41 PM
இன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது சி.பி.ஐ. அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள சிபிஐ அலுவலகம் கடந்த 2011 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைக்கராக இருந்த சிதம்பரம் முன்னிலையில் சிபிஐ அலுவலகத்தை திறந்து வைத்தார். 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 186 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசிதிகளுடன் கட்டப்பட்ட சிபிஐ தலைமை அலுவலகம் 11 மாடிகளைக் கொண்டது. விசாரணை அறைகள், சிறைக்கூடம், தங்கும் அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மாடித் தோட்டம், 500 பேர் அமரக்கூடிய உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டுள்ளது. இந்த அலுவலகத்தின் தரைதளத்தில் இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,  தற்போது 4வது தளத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

களை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன

17 views

சூடு பிடித்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - ராஷ்ட்ரீய ஜனதா தள தேர்தல் அறிக்கை வெளியீடு

"10 லட்சம் பேருக்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் " - முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உறுதி

184 views

குஜராத்திற்கு, 3 திட்டங்கள் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சோலார் மின் உற்பத்தி, விநியோகத்தில் இந்தியா முன்னணி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.

19 views

வாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்

பாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.

24 views

களை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா - திரிணாமூல் காங். எம்.பி. நுஸ்ரத் ஜஹான் வழிபாடு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன.

7 views

நேபாளத்தில் "ஷிகாளி" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு

நேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.