இன்று மதியம் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

யமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.
இன்று மதியம் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை
x
யமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரியான மாநிலம் ஹத்தினிகுந்துவில் இருந்து திறந்து விடப்படும் நீரால் யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பழைய யமுனை ஆற்று பாலத்தை தழுவ இன்று ஒரு அடி இடைவெளியே உள்ள நிலையில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. அபாய அளவை தாண்டி 206.60 மீட்டர் உயரத்தற்கு வெள்ள நீர் செல்லும் நிலையில், மதியம் ஒரு மணிக்கு மேல் 207.08 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் அதிகரிக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்