அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன
x
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் 7- வது நாளாக நடைபெற்றது. அப்போது சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் குறித்து  நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். அப்போது ராம் லாலா விராஜ்மன் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், கடந்த 1950ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி சர்ச்சைக்குரிய இடத்தில் நீதிமன்ற ஆணையர் ஆய்வு மேற்கொண்டதாகவும், அவரது அறிக்கையில், அங்குள்ள தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்