நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது சந்திரயான் - 2

சந்திரயான் - 2 விண்கலம் பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப் பாதை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது சந்திரயான் - 2
x
சந்திரயான் - 2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இந்த விண்கலம் நிலவை நோக்கி விண்ணில் ஏவப்பட்ட பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக முன்னேறி, இதுவரை 5 விதமான மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் மூன்றரை மணி அளவில், பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த தகவலை, இஸ்ரோ, தனது சமூக வலை தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

தற்போது, பூமி மற்றும் நிலா இரண்டின் சுற்றுவட்டப் பாதைகளுக்கு இடையே பயணிக்கும் சந்திரயான் 2 விண்கலம், வரும் 20-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும் என எதிர்பார்க்கபடுகிறது. அதன் பின்னர் செப்டம்பர் 7-ம் தேதியன்று நிலவில் தென் பகுதியில் தரை இறங்கம் எனவும் தனது முதல் முயற்சியிலே தரையிறங்கி ஆராய்ச்சியை துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்