லடாக் அருகே ஸ்கார்டு விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆயுதங்கள் குவிப்பு

இந்திய எல்லையில் லடாக் அருகே உள்ள, ராணுவ விமான படைத்தளத்தில் ஆயுதங்களை பாகிஸ்தான் குவித்து வருவதால், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லடாக் அருகே ஸ்கார்டு விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆயுதங்கள் குவிப்பு
x
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு எடுத்த முடிவு, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியா உடனான அனைத்து தரப்பு உறவுகளையும் அந்நாடு துண்டித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், அஜய் பிஸாரியாவு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதற்கிடையே,  இரு நாடுகளின் எல்லையில் லடாக் அருகே அமைந்துள்ள பாகிஸ்தான்  விமானப்படைத் தளமான ஸ்கார்டுவில் இன்று காலை முதல் ஆயுதங்களை அந்நாடு குவித்து வருகிறது. 3 ஹெர்குலி​ஸ் ரக விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எப்.17 ரக போர் விமானங்களை ஸ்கார்டு விமானப்படை தளத்துக்கு நகர்த்த பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நிலை​மையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்