வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று சீனா பயணம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று சீனா செல்கிறார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று சீனா பயணம்
x
இந்தியா- சீனா இடையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.  பதவியேற்ற பின் முதல் முறையாக சீனா செல்லும் அமைச்சர் ஜெயசங்கர் , சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேசுகிறார். அப்போது இருநாட்டு கலாச்சார உறவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்முத் குரேஷி அண்மையில் சீனா சென்று காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐநாவில் பிரச்சனை எழுப்ப அந்நாட்டு ஆதரவை கோரினார். இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சீனா செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்