நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் உரையாற்ற உள்ளதாக தகவல்

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ திரும்பப் பெறும் தீர்மானம் நிறைவேறியது.
நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் உரையாற்ற உள்ளதாக தகவல்
x
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ திரும்பப் பெறும் தீர்மானம் நிறைவேறியது.  ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி இன்று விளக்கம் அளித்து உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி, செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏ-சாட் குறித்து பிரதமர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. வரும் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில், பிரதமர் உரையாற்ற உள்ள நிலையில், இன்று பிரதமர் உரையாற்ற உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.





Next Story

மேலும் செய்திகள்