கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தல்

கேரளாவில் இன்றும் கனமழை நீடிக்கும் என்பதால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தல்
x
வழக்கமாக  ஜூன், ஜூலை மாதங்களில் வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை, இந்தாண்டு மந்தமாக இருந்த நிலையில்,  ஆகஸ்ட் 2  முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மூணாறின்  முக்கிய பலமாக கருதப்படும் பெரியவாரை பாலம் அபாய நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   பெரியவாரை தற்காலிக பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இன்று விடுக்கப்பட்டு உள்ளது.  மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்