சுஷ்மா சுவராஜ் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 03:07 AM
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், டெல்லியில் உள்ள லோதி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
டெல்லியில் காலமான சுஷ்மா ஸ்வராஜின் உடல்,  பாஜக தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பிற்பகலில்
சுஷ்மா சுவராஜின் இறுதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக லோதி எஸ்டேட் இடுகாட்டை அடைந்தது. அங்கு நடைபெற்ற இறுதிச்சடங்கில், பிரதமர் நரேந்திரமோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.