முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம்
பதிவு : ஆகஸ்ட் 07, 2019, 02:53 AM
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 67.
சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சுஷ்மா ஸ்வராஜ் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் நேற்று இரவு சுஷ்மா ஸ்வராஜின் உடல் திடீரென மோசமடைந்தது. இதனையடுத்து அவர்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஸ்கோயல்  உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இரவு பதினொரு மணி அளவில் சுஷ்மா உயிரிழந்தார்.  இதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

சுஷ்மா சுவ்ராஜ் மறைவுக்கு உலக தலைவர்கள், தூதர்கள் இரங்கல்

சுஷ்மா சுவ்ராஜ் மறைவுக்கு ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல்.

44 views

பிற செய்திகள்

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

187 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5 views

"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

153 views

தஞ்சாவூர் : புத்தகத் திருவிழா - பொதுமக்கள் ஆர்வம்

தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, தொடங்கி உள்ளது.

45 views

குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் குடி மராமத்து பணிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.