இந்தியா - பாக். விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப்

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் சமாதானம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாக். விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப்
x
இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் சமாதானம்  செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண உதவ வேண்டும் என பிரதமர் மோடி மற்றும்  தம்மிடம் கேட்டுக்கொண்டதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் 3- வது நபர் சமாதானம் செய்ய வேண்டும் என இந்தியா, பாகிஸ்தான்  விரும்பினால் அதற்கு தான் தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்