இந்து, கிறிஸ்தவ பெண்களின் உரிமை மீது ஏன் அக்கறையில்லை? - முத்தலாக் தடை சட்ட விவாதத்தின் மீது கனிமொழி பேச்சு

நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை? என தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து, கிறிஸ்தவ பெண்களின் உரிமை மீது ஏன் அக்கறையில்லை? - முத்தலாக் தடை சட்ட விவாதத்தின் மீது கனிமொழி பேச்சு
x
நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை? என, தி.மு.க. எம்.பி. கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தலாக் தடை சட்ட விவாதத்தில் பேசிய அவர், இந்த மசோதா குறிப்பிட்ட சமுதாயம், மற்றும் மதத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  கணவன் - மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி கருத முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் குடும்ப வன்முறை சட்டமே வலுவாக உள்ளதாகவும், இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப் படுவது ஏன்? என்றும் கனிமொழி வினவியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, முத்தலாக் மசோதா மக்களையில் நிறைவேறியது.

Next Story

மேலும் செய்திகள்