இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு ரூ.1,325 அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல சினிமா இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு, ஐதராபாத் போலீசார் ஆயிரத்து 325 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு ரூ.1,325 அபராதம்
x
போக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல சினிமா இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு, ஐதராபாத் போலீசார் ஆயிரத்து 325 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஸ்ரீராமுலு திரையரங்கில் "ஸ்மார்ட் சங்கர்" படத்தை, நண்பர்கள் அஜய் பூபதி, அகசியாவுடன் ராம்கோபால் வர்மா பார்த்தார். அங்கிருந்து மூவரும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இன்றி பயணித்ததாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராம்கோபால் வர்மா, போலீசார் எங்கே சென்றனர்? என்று கேள்வி எழுப்பி எழுப்பி இருந்தார். இதனையடுத்து அவருக்கு, ஆயிரத்து 325 ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார், அந்த டிவிட்டர் பதிவையும், தமது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்