இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.
இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
x
இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல், இடமாற்றம் செய்யப்பட்டு, உத்தரபிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேப்போல பீகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன், இடமாற்றப்பட்டு, மத்திய பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பீகார் ஆளுநராக பாகு சவுகானும், நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேப்போல மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஜெகதீப் தன்கரும், திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயஸ்சும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்