முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு?
பதிவு : ஜூலை 19, 2019, 02:11 AM
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர்,அவசர கடிதம் எழுதியுள்ளார்
கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர்  குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, காரசார விவாதம் நடைபெற்றது. அவை கூடியதும் முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா இன்றே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் நம்பிக்கை ஓட்டெடுப்பை அவசரமாக நடத்த முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர்  குமாரசாமி , தமது அரசு மீது ஆதாரமற்ற 
குற்றச்சாட்டுக்கள் கூறப்படுவதாகவும், கூட்டணி ஆட்சி குறித்து ஆரம்பம் முதலே சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டமன்றத்தில்  விவாதிக்க தயார் என்று கூறிய குமாரசாமி . பா.ஜ.க. துணையுடன் தான் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 
உச்சநீதிமன்றம் சென்றதாக குற்றம்சாட்டினார். ஒரு வரியில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து  விட்டு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாகவும் குமாரசாமி கூறினார்.  

பின்னர் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உச்சநீதிமன்ற  தீர்ப்பில் குழப்பம் உள்ளதாகவும் , இதனால்  நம்பிக்கை ஓட்டெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என கர்நாடக சட்ட அமைச்சர் கூறினார். 

இதனை தொடர்ந்து, அவையில் கடும் அமளி நிலவியது. இதையடுத்து அவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2191 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10016 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்கள் : நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்களை நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

1 views

செப்டம்பர் 2ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் -2 பயணத்தில் முக்கிய மைல்கல் இன்று எட்டப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

12 views

கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

56 views

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்து கொலை செய்தார்.

1160 views

சத்தீஸ்கரில் முத்தலாக் கூறி மனைவியை தாக்கிய கணவன் கைது

சத்தீஸ்கரில் மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

46 views

நிலச்சரிவில் உயிரிழந்தவரின் உடலுக்கு இருதரப்பினர் உரிமை கோரல் : மரபணு சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை

கேரளாவில் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலத்திற்கு இருதரப்பினர் உரிமை கோரியதால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.