திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து
x
திருமலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எல் 1 , எல் 2 , எல் 3 ஆகிய முக்கிய பிரமுகர்களுக்கான 
விஐபி தரிசனம் முறையின் மூலம் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவித்தார். 

பக்தர்களுக்கு மனநிலையை பாதிக்கும் வகையில் உள்ள மூன்று ரகமான தரிசன முறையை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் அவர்களுக்கு உண்டான தகுதியின்படி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தினந்தோறும் 3 மணி நேரத்திற்கு மேல் விஐபி தரிசனம் நடைபெற்றது எனவும்  விஐபிகளுக்கு ஒதுக்கக்கூடிய நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 
5 ஆயிரம் பேர் வரை பொதுதரிசனத்தில் சுவாமியை தரிசிக்கலாம் எனவும்
சுப்பாரெட்டி  கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்