கர்நாடகாவின் நலன் கருதி பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு - ஆளுநரிடம் எடியூரப்பா கடிதம்

கர்நாடகாவின் நலன் கருதி பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு அம்மாநில ஆளுநரிடம் எடியூரப்பா கடிதம் அளித்துள்ளார்.
கர்நாடகாவின் நலன் கருதி பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு - ஆளுநரிடம் எடியூரப்பா கடிதம்
x
கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில்,  ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சட்டப் பேரவை முன்பு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் அமர்ந்து முழக்கமிட்ட  எடியூரப்பா, முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இதை தொடர்ந்து ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா,  கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி பா.ஜ.க. ஆட்சி 
அமைக்க வாய்ப்பு தருமாறு, கடிதம் அளித்தார். சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 12 ந்தேதி தொடங்கி  26 ந்நேதி வரை நடைபெற உள்ள நிலையில் 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் பட்ஜெட் உரை மீதான விவாதம் பாதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 14 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக  அவர்களை நேரில் அழைத்து விசாரித்து சட்டப்படி ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் 105 பேர் உள்ளதாகவும், 2 சுயேட்சைகளின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகவும் அக்கடிதத்தில் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்