புதுச்சேரி : நெல்லித் தோப்பு மார்க்கெட்டில் பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் கொலை
பதிவு : ஜூலை 09, 2019, 01:06 PM
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் இன்று காலை 7 மணியளவில், தமிழ்வாணன் என்பவரும் அவருடன் பணியாற்றும் சேகர் என்கிற பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் இன்று காலை 7 மணியளவில், தமிழ்வாணன் என்பவரும் அவருடன் பணியாற்றும் சேகர் என்கிற பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சேகர் ஒரு கட்டத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து தமிழ்வாணன் தலையில் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்வாணன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே இடத்தில வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும், அப்படி ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. கொலை செய்து விட்டு தப்பியோடிய சேகரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், பட்டப்பகலில் மார்க்கெட்டில் மக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

8096 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1704 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4900 views

பிற செய்திகள்

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

4 views

சென்னையில் 4 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் நான்கு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

8 views

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.

12 views

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

34 views

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

9 views

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.