இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லி வந்தடைந்தார்.
இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் : பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு
x
வரும், 28, 29ம் தேதிகளில் ஜப்பானில், 'ஜி20' மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச உள்ளார். மோடி - டிரம்ப் சந்திப்புக்கு முன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ இந்தியா வந்துள்ளார். இன்றிரவு டெல்லி வந்தடைந்த அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். நாளை பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது அமெரிக்கா - இந்தியா இடையே ராணுவ உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பாம்பியோ, இலங்கை செல்ல உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்