உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான நீர் இல்லை : ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்
பதிவு : ஜூன் 21, 2019, 04:06 AM
உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கம், நாம் பயன்படுத்தும் ஏ.சி., இயந்திரங்கள், குப்பைகள் எரிப்பது, வாகனங்களால் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலையில் கடும் மாற்றம் ஏற்பட்டு மனித குலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த சூழலில், உலகில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லை என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ. நா. நிறுவனமான யூனிசெப் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அதில்  கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரியவந்துள்ளது.  அதேபோல், 4.2 பில்லியன்  பேர், கை கழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரத்தை பேண முடியாமல் தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் 21 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 67.3 கோடி பேர் திறந்த வெளியில் கழிவுகளை கழித்து வருவதாகவும், இது பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிற செய்திகள்

இணைப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகள் மூடப்படுகிறது - தங்கம் தென்னரசு, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர்

இணைப்பு என்ற பெயரில் தொடர்ந்து அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

10 views

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான ஒரிசா தம்பதியின் ஆண் குழந்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 views

மாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்

சென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

427 views

கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

15 views

கொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

9 views

தபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி

தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.