ஜனவரி 12ஆம் தேதி 243 பேருடன் சென்ற தேவமாதா படகு மாயம் : கேரள போலீசார் விசாரணை
பதிவு : ஜூன் 21, 2019, 01:55 AM
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முனாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தேவமாதா என்ற பெரிய படகில் 243 பேர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முனாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தேவமாதா என்ற பெரிய படகில் 243 பேர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படகு கடல் பகுதியில் மாயமாகிவிட்டதாகவும், அதில் பயணித்த 243 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே கேரள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் இது குறித்து பல நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை தகவல் தொடர்பாளர் ரவீஷ் குமார், அந்த படகு பசிபிக் கடல் பகுதியை நோக்கி சென்றதாக கேரள அரசு கூறிய தகவலின் அடிப்படையில் பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த நாடுகளிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் மாயமான 243 பேரின் உறவினர்கள், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை விரைவில் சந்திக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.