கர்நாடக விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் : சதானந்த கவுடா கோரிக்கை
பதிவு : ஜூன் 21, 2019, 01:11 AM
கர்நாடக விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா காவிரி மேலாண்மை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இம்மாதம் 9 புள்ளி 19 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அதனை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. மாறாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் என்ற வகையில் தற்போது வரை 1 புள்ளி 7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்கப்படவில்லை என்று கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.