கர்நாடக அணைப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது : காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் கருத்து
பதிவு : ஜூன் 21, 2019, 12:19 AM
கடந்த 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 1 புள்ளி 72 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளதாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் கூறினார்.
புதுடெல்லியில் நடைபெற்ற, காவிரி நீர் ஒழுங்காற்று குழு  கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அக்குழுவின் தலைவர் நவீன்குமார்,  கர்நாடக அணைப் பகுதிகளில் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.கூட்டத்தில், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும்,  கடந்த ஒன்றாம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 1 புள்ளி 72 டிஎம்சி  தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளதாகவும் கூறினார்.காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தின் அறிக்கையை, வரும் 25 ஆம் தேதி நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அளிக்க உள்ளதாகவும், அப்போது விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.