நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை
பதிவு : ஜூன் 19, 2019, 12:06 AM
நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மிக முக்கியமான முன்னெடுப்பு குறித்த சட்டநிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.