குடிநீர் பிரச்சனையை உலக நாடுகள் எப்படி சமாளிக்கின்றன ?
பதிவு : ஜூன் 18, 2019, 02:12 PM
தமிழகம் கடும் குடிநீர் பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், உலக நாடுகள் குடிநீர் பிரச்சினையை எவ்வாறு சமாளிக்கிறது என்பதை தற்போது காணலாம்..
கடுமையான நீர் தட்டுபாடு மிகுந்த பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் இஸ்ரேல் நாடு, குடிநீர் தொழில்நுட்பத்தில் முன்ணணியில் உள்ளது. சொட்டு நீர் பாசன முறையை உருவாக்கி, அதை வெற்றிகரமாக பயன்படுத்திய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. குடிநீர் குழாய்களில் ஏற்படும் சிறு துளைகள் மற்றும் உடைப்புகளை உடனடியாக கண்டறிந்து, அதை ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ரோபாக்களின் உதவியுடன் உடனுக்குடன் சரி செய்கின்றனர். இதன் மூலம் குடிநீர் வீணாவது மிக மிக குறைக்கபட்டுள்ளது. நகரங்கள் மற்றும் கிராமங்களின் கழிவுநீரை முற்றிலும் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களில் முன்ணணியில் உள்ளது. இஸ்ரேல்  முழுவதிலும் மொத்தம் 120 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு சுமார்  80 சதவீத கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்துவதிலும்  இஸ்ரேல் முன்னோடியாக உள்ளது. இவற்றின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளது. பாலைவன நாடான சவுதி அரேபியாவும் பல திட்டங்களை செயல்படுத்தி,  97 சதவீத மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்த குடிநீர் விநியோகத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் 50 சதவீதமும், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் 40 சதவீதமும், நீர்நிலைகளில் இருந்து 10 சதவீதமும் பெறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

775 views

பிற செய்திகள்

உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் அழைப்பு

தமிழக முதல்வர், எதிர்க் கட்சித் தலைவரை போல, உடல் உறுப்புகளை தானமாக வழங்க அனைத்து எம்.எல்.ஏ-க்களும் முன்வர வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4 views

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.

22 views

கொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால் : உடல்நிலை கவலைக்கிடம்...

கொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

திமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்

வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்தி விடாதீர்கள் என திமுகவினருக்கு, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

20 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை கடத்தல் : வீடியோ வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3 வயதான ஆண் குழந்தையை கடத்திய குற்றவாளியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

52 views

மாணவர் ரம்பு படுகொலை - நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

மதுரை மேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட மாணவர் ரம்புவின் படுகொலைக்கு நீதி கேட்டு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.