பிரதமர் மோடியின் அபிமானியால் ஏற்பட்ட அனுபவம் : சமூகவலைதளத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை
பதிவு : ஜூன் 18, 2019, 08:31 AM
பிரதமர் மோடியின் அபிமானியால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தமது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் தமது குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். குல்மார்க் என்ற பகுதியில் அவர் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது பெண் ஒருவர் தனது மகளுடன் ஓடி வந்து பிரகாஷ் ராஜூடன் செல்பி எடுத்துள்ளனர். இதை அருகில் இருந்து பார்த்த அந்த பெண்ணின் கணவர், மோடியை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜிடமா புகைப்படம் எடுத்தாய்? என்று கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் அழத் தொடங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  பிரகாஷ் ராஜ், அந்த நபரை அழைத்து தம்மையும், மோடியையும் முன்னிறுத்தியா, தாங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்குமாறு கூறியுள்ளார். இந்த சம்பவத்தை பிரகாஷ் ராஜ் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

953 views

பிற செய்திகள்

ஐதராபாத் : சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மருத்துவர்கள் சென்ற கார் ஒன்று, சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

23 views

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை - 3 பேர் பலி

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.

26 views

அரசுப் பேருந்துக்குள் நடனம் ஆடிய இளம்பெண் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ

டெல்லியில் மாநகர பேருந்துக்குள் நடனமாடிய பெண்ணை வேடிக்கை பார்த்த, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

744 views

புதுச்சேரி : நாகமுத்து மாரியம்மன் கோயில் தேர் பவனி - வடம் பிடித்து முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கம்

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற நாகமுத்து மாரியம்மன் கோயில் தேர் பவனியை வடம் பிடித்து முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

16 views

கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

27 views

"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.