மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
x
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்தார். அதையடுத்து நோயாளியின் உறவினர்கள்  2 பயிற்சி மருத்துவர்களை தாக்கியுள்ளனர். அதைக் கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் கடந்த11 ஆம்  தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்துக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் புறநோயாளிகள் சிகிச்சை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. நாளை காலை வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்