ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்
x
கேரள மாநிலத்தை சேர்ந்த சில மாஃபியா கும்பல்கள் மூலம் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பேருந்து மூலம் கொச்சி அருகே கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலுவா போதை தடுப்பு ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற சோதனையில், கோட்டயத்தை சேர்ந்த சகில் என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா ஆயில், 95 அல்பாராக்ஸ், 35 நைட்ரோபாம் போன்றவை சிக்கின. சகிலிடம் நடத்திய விசாரணையில், போதை பொருட்களை ஆலுவா ரயில் நிலையத்திற்கு வரும் நபர் ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக வந்ததாக கூறினார். இதையடுத்து, அவரை கைது செய்த போதை தடுப்பு பிரிவினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்