திருப்பதி கோயிலுக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி
பதிவு : ஜூன் 08, 2019, 12:44 PM
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரதமர் மோடி நாளை செல்வதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரதமர் மோடி நாளை செல்வதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு, இலங்கை பயணத்தை முடித்துகொண்டு நாளை மாலை ரேணிகுண்டா செல்லும்  மோடி, அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பின்னர்,  இரவு 7 மணி அளவில் திருமலை செல்லும் அவர், ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதைதொடர்ந்து, அங்கிருந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி, திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.