தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை
பதிவு : ஜூன் 07, 2019, 04:49 PM
பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.
குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று இரவு பிரதமர் மோடி கேரளா வருகிறார். விமானம் மூலம் கொச்சி வரும் அவர், இரவு எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதையடுத்து நாளை காலை 8.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்குள்ள பள்ளி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று   வயநாடு தொகுதிக்கு வருகை தருகிறார். இன்றிலிருந்து 3 நாட்களுக்கு வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். இன்று மாலை வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் சாலை பயணம் மேற்கொள்ளவிருக்கும், அவர் மொத்தம் 6 சாலை பயணங்களில் பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இரு தலைவர்களும் தென்மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

35 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

98 views

பிற செய்திகள்

மூணாறில் பூத்துக்குலுங்கும் க்ரைஸ்கோமிய பூக்கள் : அரிய வகை பூக்களை காண குவியும் சுற்றுலா பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில் பூத்துக்குலுங்கும் க்ரைஸ்கோமிய பூக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

3 views

இந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்

நாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16 views

"கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை" - நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

14 views

தபால் துறை தேர்வு விவகாரம் : அதிமுக , திமுக எம்பிக்கள் அமளி

தபால் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக , திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

7 views

மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் தெற்கு பகுதியான டோங்கிரியில் இன்று காலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

16 views

கூட்டத்தொடரின் போது அவைக்கு வராத அமைச்சர்கள் : அதிருப்தி அடைந்த பிரதமர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவைக்கு வராத அமைச்சர்கள் மீது பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார்.

134 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.