கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியா ? - முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்
பதிவு : மே 27, 2019, 07:02 PM
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் கிடைக்காத சில சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ரமேஸ் ஜார்க்கிஹொளி மற்றும் சுதாகர் ஆகியோர் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் பாஜக தலைவர்களை சந்தித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடமளித்து நிலைமையை சரிசெய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. முன்னதாக பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க எடுக்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

ராபர்ட் வதேரா மீதான வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி விற்றுள்ளார்

39 views

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

29 views

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

38 views

பிற செய்திகள்

சித்தூர் குடிபாலா கிராமத்தில் பல்வேறு அலங்காரங்களுடன் காளை மாட்டுக்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் குடிபாலா கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளை பூஜை நடைபெற்றது.

8 views

108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்...

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில் 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.

8 views

ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

18 views

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

29 views

ப்ரக்யா சிங் தாகூர் எம்.பியாக பதவியேற்கும் போது மக்களவையில் சலசலப்பு

மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாக்கூர் உறுப்பினராக பதவி ஏற்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

1400 views

தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.